‘ரணபலி’ படத்தில் ‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தில் நடித்த அனுபவத்தால் ஈர்க்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, 400 குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அக்டோபர் 16ம் தேதி வெளியாகவுள்ள ‘ரணபலி’. படம் தம்மிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், தமது இந்த செயல் மற்றவருக்கும் உதவும் எண்ணத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.