சினிமா

ரஜினி நடிப்பில் '2.0' திரைப்படம் வெளியானது - ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2 பாயிண்ட் ஓ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

தந்தி டிவி

இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், சுமார் 500 கோடி ரூபாய் பொருட்செலவில் 3 டி வடிவிலும், 4 டி சவுண்ட் தொழில்நுட்பத்திலும், இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். செல்போன் தொழில்நுட்பம் குறித்த தகவல்களும், அதன் பலன்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 625 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் 2 பாயிண்ட் ஓ திரைப்படம் இன்று வெளியானது.

திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள் - ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இதனிடையே, 2 பாயிண்ட் ஓ படத்தின் முதல் காட்சிக்காக அதிகாலையிலேயே திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் காலை 4 மணி காட்சிக்காக வந்திருந்த ரசிகர்கள், ரஜினியின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்