ரஜினி - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் 'ரஜினி 166' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில், பெரும்பாலான படப்பிடிப்பை மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா, முருகதாஸின் துப்பாக்கி ஆகிய படங்கள் மும்பையை கதைக்களமாக கொண்டிருந்தன. தற்போது மீண்டும் மும்பையை தேர்வு செய்திருப்பதாக வந்துள்ள தகவல் படத்தின் மீதான எதிர்ப்பார்பை அதிகரிக்க செய்துள்ளது.