சினிமா

வாட்ஸ்-அப் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி - நடிகை ஜெயலட்சுமி கொடுத்த புகாரில் இருவர் கைது

நடிகைகள் சிலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வாட்ஸ்-அப் மூலம் வலை விரித்த கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருக்கு வாட்ஸ் அப் மூலம் ரிலேஷன்ஷிப், டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் இரண்டு முறை மெசேஜ் வந்துள்ளது.

அதில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும், விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஜெயலட்சுமி, சக தோழிகளை தொடர்பு கொண்டு விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நடிகைகள் சிலரின் பேஸ்புக் அக்கௌண்டில் இருந்து அவர்களது செல்போன் மற்றும் புகைப்படங்களை எடுத்த ஒரு கும்பல், வாட்ஸ் அப் மூலம் அதே மெசேஜை தனித்தனியாக அனுப்பியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்