சினிமா

திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு : ஏ.எல். அழகப்பன் உள்ளிட்ட 29 பேருக்கு நோட்டீஸ்

தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்ட விவகாரம் தொடர்பாக, ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், கே.ராஜன், ஷக்தி சிதம்பரம் உள்ளிட்ட 29 பேருக்கு விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தந்தி டிவி

தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்ட விவகாரம் தொடர்பாக, ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், கே.ராஜன், ஷக்தி சிதம்பரம் உள்ளிட்ட 29 பேருக்கு விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கணக்கு தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்த தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் சிலர் கடந்த 19 ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டுப் போட்டனர். மறுநாள் இதனை அகற்ற முயன்ற சங்க தலைவர் நடிகர் விஷால் கைதாகி விடுதலையானார்.

இந்நிலையில், டிசம்பர் 21 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த விஷால், சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிவித்த நிலையில், நேற்றிரவு 29 பேருக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு 15 நாட்களில் சம்மந்தப்பட்டவர்கள் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும், பதில் வராத நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் தரப்பு தெரிவித்துள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்