சினிமா

இன்று மாலை திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டம்

பரபரப்பான சூழ்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலக கட்டிடத்தில் இன்று மாலை 5 ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தந்தி டிவி

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான நடிகர் விஷாலின் செயல்பாடு சரியில்லை எனக்கூறி தயாரிப்பாளர் சங்கத்தின் ஒருபிரிவினர் சங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டனர். பூட்டை உடைக்க முயன்றபோது நடிகர் விஷால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் பூட்டை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அலுவலகத்துக்கு போடப்பட்ட பூட்டு அகற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு தயாரிப்பாளர் சங்கக்கூட்டம் நடக்கிறது. செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்தில், சங்கத்துக்கு பூட்டு போட்டவர்களை நீக்குவது குறித்தும், பொதுக்குழுவை எப்போது கூட்டுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்