சினிமா

இணைய மோதலுக்கு பலியான பிரியா வாரியர் பாடல்

பிடித்துப் போனால் உலக அளவில் புகழின் உச்சிக்கே கொண்டு செல்லமுடியும் அதேசமயம் சீண்டிபார்த்தால், அதள பாதாளத்துக்கு தள்ளவும் முடியும் என தமிழ் இளைஞர்கள் இணையதளங்களில் மார்தட்டி வருகின்றனர்.

தந்தி டிவி

பிரியா வாரியர் கண் அசைவால், இளைஞர்களை கிறங்கடித்த இளம் நடிகை. குறிப்பாக தமிழக இளைஞர்கள் இவரது கண் சிமிட்டலில் மூழ்கி கிடந்ததை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. பல தமிழக இளைஞர்கள் தமிழ் பெண்களை வம்புக்கு இழுப்பதற்காகவே இணையதளங்கள் முழுவதும் பிரியா வாரியரின் கண் அழகை வர்ணித்து வந்தனர்.

இதுமட்டுமல்ல ஜிமிக்கி கம்மல், சூயூ என தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து பிறமொழி நடிகளைகளின் புகழ்பாடி வந்தனர். இந்நிலையில், ஒரு ஆதர் லவ் படத்தின் Freak penne பாடல் வெளியானது. மனதை வருடும் இசை, நடிகை பிரியா வாரியரின் புகழ்பாடும் வரிகள், வண்ணங்களை அள்ளித்தெளித்த ஒளிப்பதிவு என பாடல் பிரமாண்டத்தை வெளிப்படுத்தியது.

இந்தப் பாடல் தொடர்ந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த பாடலுக்கு லைக்ஸை விட டிஸ்லைக்ஸ் அதிகமாக உள்ளது.அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல லைக்ஸை விட டிஸ் லைக்ஸ் ஆறு மடங்கு.

வசீகரிக்கும் பாடல் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு?

மியூசிக்கல்லி ஆப்பில், தமிழக கேரள இளைஞர்கள் இடையே நீண்ட மோதலின் எதிரொலி தான் வெறுப்புக்கு காரணம்.பிரியாவாரியரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற தமிழ் இளைஞர் பட்டாளம் தற்போது அவரது பாடலுக்கு டிஸ்லைக்ஸை தெறிக்க விட்டுள்ளனர்.

மழைவெள்ளத்தில் கேரளா தத்தளிக்க, தமிழகத்தில் இருந்து பல்வேறு அமைப்புகளும்,இளைஞர்களும் உதவிக்கரம் நீட்டிகொண்டிருந்த சமயம் அது. தமிழ் இளைஞர் ஒருவர் கேரளா பெண்களை தமிழக இளைஞர்களுக்குக் கட்டிக்கொடுத்தால், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என கிண்டலாக மியூசிக்கல்லி ஆப்பில் வீடியோ பதிவு செய்ய, அது சர்ச்சையின் உச்சத்தைத் தொட்டது. அவ்வளவுதான் கேரள இளைஞர்களும், பெண்களும் வீடியோ மூலம் தமிழக இளைஞர்களை தாக்கத் தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் கேரளத்து வாலிபர்கள் மற்றும் பெண்களின் விமர்சனத்திலிருந்து தமிழக பெண்களும் தப்ப முடியவில்லை. தமிழக பெண்கள் மீது விமர்சனம் திரும்ப,

தமிழகத்திலிருந்தும் பதில் கணைகள் பாய்ந்தது. மோதல் வலுக்க, தமிழ் இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழ் பெண்கள் வீடியோ மூலம் ஆதரவு தெரிவிக்கத்துவங்கினர்.

இந்த மோதல் காலகட்டத்தில்தான் பிரியா வாரியரின் Freak penne பாடல் வெளியானது. எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யக் காத்திருந்த தமிழக இளைஞர்களின் விரல்களுக்கு பலியானது பிரியா வாரியர் பாடல்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்