சினிமா

'பேட்ட' படத்தின் பாடல்கள் டிச.9-ல் வெளியீடு : மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தின் பாடல்கள் டிசம்பர் 9ம் தேதி வெளியாகிறது.

தந்தி டிவி

ரஜினி நடிக்கும் 'பேட்ட' திரைப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலன்று 'பேட்ட' வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் 9ம் தேதி வெளியாகும் என 'சன் பிக்சர்ஸ்' அறிவித்துள்ளது.

அதற்கு முன்பாக, 'பேட்ட' படத்தின் முதல் சிங்கிள் டிராக் டிசம்பர் 3ம் தேதியும், இரண்டாவது சிங்கிள் டிராக் டிசம்பர் 7ம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் '2.0' படம், வருகிற 29ம் தேதி வெளியாகும் நிலையில், 'பேட்ட' படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரஜினி ரசிகர்கள்

மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்