ஓ.டி.டி தளத்தில் "பராசக்தி" - விமர்சனங்களுக்கு சுதா கொங்கரா பதிலடி 
சினிமா

ஓ.டி.டி தளத்தில் "பராசக்தி" - விமர்சனங்களுக்கு சுதா கொங்கரா பதிலடி

ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள பராசக்தி படத்தில் தன் மீதான தவறான விமர்சனங்களுக்கு, இயக்குனர் சுதா கொங்கரா மீதான பதிலடி கொடுத்துள்ளார்

thanthitv

ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள பராசக்தி படத்தில் தன் மீதான தவறான விமர்சனங்களுக்கு, இயக்குனர் சுதா கொங்கரா மீதான பதிலடி கொடுத்துள்ளார்

ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள பராசக்தி படத்தில் தன் மீதான தவறான விமர்சனங்களுக்கு, இயக்குனர் சுதா கொங்கரா மீதான பதிலடி கொடுத்துள்ளார்.

சிவகார்த்தியேகன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் பராசக்தி. இதில் நடிகர்கள் அதர்வா, ரவி மோகன், நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவான இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் தற்போது ஓ டி டி தளத்தில் வெளியானது.

இதில் திரையரங்கில் ரிலீஸ் ஆன தமிழ் வெர்ஷன் அப்படியே வெளியாகி உள்ளது

அதே நேரத்தில் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. , பராசக்தி படத்தில் எங்கு எல்லாம் தமிழ் மற்றும் தமிழ் வாழ்க என்று வசனங்களாக இருந்ததோ, அங்கு எல்லாம் மாத்ரு பாஷை என்ற சொல் பயன்படுத்தபட்டுள்ளது.

இதில் மாத்ரு பாஷா என்ற சமஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம், இது ஏதோ ஒரு குறிப்பிட்ட மொழிக்கான போராட்டம் மட்டுமல்ல, அந்தந்த மாநில மக்களின் தாய்மொழி உரிமைக்கான போராட்டம் என்பதைக் காட்டி உள்ளார்

அதேநேரம் படத்தில் எழுத்துகளாக காட்சிகளில் காட்டப்பட்டவை அனைத்துமே அப்படியே தமிழில் காட்டப்படுகிறது. குறிப்பாக நீதி பரவட்டும், ஆங்கிலம் வேண்டாம்.., ஆனால் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த கார் வேண்டுமா?, தமிழ் வாழ்க, இந்தி வாழ்க போன்ற அனைத்துமே அப்படியே காட்டப்பட்டுள்ளது.

மொழிப்போர் போன்ற வரலாற்று சம்பவத்தை படமாக உருவாக்கும் போது, அதில் வணிக ரீதியான லாபத்தை எதிர்நோக்கி, அந்தந்த பிராந்திய மொழிகளுக்கு ஏற்றவகையில் படத்தை மாற்றிக் காட்டாமல், மொழிப்போரை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் சுதா கொங்கரா...

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்