சினிமா

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள "கூழாங்கல்" - மகிழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த கூழாங்கல் திரைப்படம், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த கூழாங்கல் திரைப்படம், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 94 ஆவது ஆஸ்கர் விருதுகள் விழா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆஸ்கார் விருது பட்டியலில் 'சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான' பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் சர்தார் உத்தாம், ஷேர்னி, மற்றும் தமிழ் படங்களான கூழாங்கல், மண்டேலா உள்ளிட்ட 14 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன. இதில், இறுதியாக ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக கூழாங்கல் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்