சினிமா

பிகில் திரைப்படத்தின் டிரைலர் புதிய சாதனை - ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள்

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் வெளியான மூன்று மணி நேரத்திற்குள் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது

தந்தி டிவி

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் வெளியான மூன்று மணி நேரத்திற்குள் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யூ டியூப்பில் வெளியான 3 மணி நேரத்திற்குள் 1 கோடி பார்வையாளர்கள் இந்த டிரைலரை பார்த்துள்ளனர். மேலும் டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இதன் மூலம் அதிவேகமாக 10 லட்சம் லைக் பெற்ற தமிழ் திரைப்படத்தின் டிரைலர் என்ற சாதனையை பிகில் படைத்துள்ளது. இதே போன்று பிகில் டிரைலரை கண்டு பாலிவுட் நடிகர் ஷாரூக் கான், வரூண் தவான், பிரபல இயக்குனர் கரன் ஜோகர், ஹாலிவுட் நடிகர் Bill Duke ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்