சினிமா

நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் ஒத்திவைப்பா? - நாசர் விளக்கம்

நடிகர் சங்க தேர்தலை 6 மாத காலம் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், வரும் அக்டோபரில் நடைபெற வேண்டிய நடிகர் சங்க தேர்தலை 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என உறுப்பினர்கள் கூறியதாக நாசர் தெரிவித்தார்.

"தேர்தல் ஒத்திவைப்பு ஏற்கக்கூடியதல்ல"

நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரத்து செல்லாது என்ற உத்தரவு பெற்று பொதுக்குழுவில் பங்கேற்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சங்க தேர்தலை ஒத்தி வைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என்றார்.

என்னை எளிதில் பழிவாங்கி விடலாம் - நடிகர் ஆனந்தராஜ்

நடிகர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு ஏற்கக் கூடியது தான் - நடிகர் விஜயகுமார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்