சினிமா

ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்யிடவுள்ளவர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜூன் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் ஜூன் 11-ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், துணைத்தலைவர் பதவிக்கு பூச்சி முருகன் மற்றும் கருணாஸும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டி வாய்ப்புள்ளது. இதேபோல் பாண்டவர் அணி சார்பில் செயற்குழுவில் ராஜேஷ் , ஜூனியர் பாலையா, ஸ்ரீமன், கோவை சரளா உள்ளிட்ட 15 பேர் போட்டியிட வாய்ப்புள்ளது.எதிரணியினர் சார்பில் தலைவர் பதவிக்கு ராதிகா சரத்குமாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகர் உதயாவும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர ஆர்.கே.சுரேஷ், எஸ் வி சேகர் உள்ளிட்டோரும் எதிரணியில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்