வரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். சென்னை பாண்டி பஜாரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை காண தாம், மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.