சினிமா

மீண்டும் வருகிறார் முத்துவேல் பாண்டியன் - 'ஜெயிலர்-2' அறிவிப்பு

தந்தி டிவி
• ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்பதை படக்குழு டீசருடன் அறிவித்துள்ளது. • நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படம் வசூல் சாதனை படைத்தது. ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படம் வெளியான சில மாதங்களில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்பட்ட நிலையில், படக்குழு அமைதி காத்து வந்தது. இந்த சூழலில், பொங்கலை முன்னிட்டு சூப்பர் அறிவிப்பு உள்ளதாக எதிர்பார்ப்பை எகிற வைத்த தயாரிப்பு நிறுவனம், தைப்பொங்கல் தினத்தில் மாலை 6 மணிக்கு படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக டீசருடன் அறிவிப்பு வெளியிட்டது. முதல் பாகத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஹுக்கும் பாடலுடன் ரஜினிகாந்த் வரும் டீசர் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு