சினிமா

பிரபலத்தின் மகள்... மோகன்லாலின் செய்த கூசும் செயல்..கூடவே இருந்த மம்மூட்டி'' விஷாலுக்கும் சேத்து விழுந்த விளாசல் பூகம்பத்தை கிளப்பிய மூத்த நடிகை

தந்தி டிவி

மோகன்லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் மீது சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இதுகுறித்த விரிவான செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

ஆண்கள், பெண்கள் என பாலின பேதமின்றி மலையாள சினிமாவில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாக தொடரும் புகார்களால் கதிகலங்கிப் போயிருக்கிறது திரைத்துறை...

இப்போதுதான் இவ்விவகாரம் பூதாகரமாகும் நிலையில்...அந்தக் காலத்தில் இருந்தே பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாக பரபரப்பைக் கிளப்பியுள்ளார் நடிகை சாந்தி வில்லியம்ஸ்...

பாலியல் புகார்களால் கேரள நடிகர் சங்கமான அம்மா கலைக்கப்பட்டு தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் ராஜினாமா செய்த நிலையில்...அதைக் கடுமையாக விமர்சித்துள்ளார் சாந்தி வில்லியம்ஸ்...

மேலும் மலையாள திரையுலகில் இளம்வயது...முதுமை என்ற கணக்கெல்லாம் கிடையாதாம்...எந்த வயது பெண்ணாக இருந்தாலும் பாலியல் தொந்தரவில் இருந்து தப்ப முடியாது என்கிறார் சாந்தி வில்லியம்ஸ்...

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு சென்னை வரும் இளம்பெண்கள் பலர் ஏஜெண்ட்டுகள் போன்றோரால் ஏமாற்றப்படும் கதைகளும் ஏராளம் என சாந்தி வில்லியம்ஸ் பகீர் தருகிறார்...

மலையாள திரையுலகின் மீது மலையாள நடிகைகள் மட்டுமல்லாது தமிழ் நடிகைகளும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்