சினிமா

சூட்டிங் ஸ்பாட்டிலேயே பிரபல நடிகையை கதறவிட்ட ஸ்டார் நடிகர்? "தனியாக தன் வீட்டுக்கு அழைத்து..." அடுத்த குண்டு

தந்தி டிவி

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஜெயசூர்யா, விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

மலையாள திரையுலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் ஜெயசூர்யா.

சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய அவர், சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார்..

தமிழ் திரையுலகினருக்கு வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வரும் சாகிர் ஆக பரிட்சையமானவர் இந்த ஜெயசூர்யா...

மலையாள திரையுலகில் எண்ணற்ற படங்களில் நடித்து விருதுகளை குவித்துள்ள ஜெயசூர்யா, மதிக்கத்தக்க நடிகராகவும் வலம் வந்தார்..

இந்த சூழலில் தான் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை கிளப்பியிருந்தார் மலையாள நடிகை மினு முனிர்.

2008ல் வெளியான டீ இங்கோட்டு நோக்கியே என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில், தன்னை கட்டியணைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், திருவனந்தபுரத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்...

இக்குற்றச்சாட்டு மலையாளத் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மவுனம் காத்து வந்த ஜெயசூர்யா தனது பக்க விளக்கத்தை அளித்துள்ளார்.

தனது சொந்த காரணத்திற்கு தானும் தனது குடும்பத்தினரும் ஒரு மாதமாக அமெரிக்காவில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த நேரத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தன் மீது இரண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மனசாட்சியற்றவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது எளிது, பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது மிகவும் வேதனையானது என குறிப்பிட்டுள்ளார்.

பொய் எப்போதும் உண்மையை விட வேகமாக பயணிக்கும் ஆனால் உண்மை வெல்லும் என நம்புவதாக குறிப்பிட்ட அவர், நீதித்துறை மீது நம்பிக்கையுள்ளதாகவும், அங்குள்ள பணிகளை முடித்து விட்டு இந்தியா திரும்புவேன், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என குறிப்பிட்டிருந்தார்.

Union Budget 2026 | ``5 மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஸ்பெஷல் கவனிப்பு?’’

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | ரூ.15 லட்சமாக.. பரபரப்பை எகிறவிடும் மத்திய பட்ஜெட்

🔴LIVE : Union Budget 2026 | மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் வருகை

Union Budget 2026 | பல சர்ப்ரைஸோடு தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்?