வழக்கமான பாடல்களை போல் இல்லாமல், வார்த்தை ஜாலங்களால்... துடிப்பான இசையால்...துள்ள வைத்து விடுகின்றன ராப் பாடல்கள்....
90 கால கட்டத்தில் ராப் பாடல்களை தூக்கி நிறுத்த கைகள் போதவில்லை என்ற சூழலில், 2கே கிட்ஸ்க்கு வரமாய் வந்தார் ஹிப்ஹாப் ஆதி...
காதல் தொடங்கி அரசியல், சமூக அவலங்கள் ஆகிய பலவற்றை ராப் பாடல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தே வைத்தார் அவர்..
இப்படியே ராப் பாடலுக்கென மார்க்கெட் தனியாக உருவாக, பல ராப் கலைஞர்களும் வரத் தொடங்கினர்.. அதில் கவனிக்கத்தக்க ஒருவர் அறிவு....
திரைத்துறையில் ராப் பாடல்கள் டாப் கியரில் சென்று கொண்டிருக்க... அதனையே மக்களுக்கு அரசியலை உணர்த்தும் பகடையாய் கையில் எடுத்துள்ளனர் காம்ரேட் கேங்ஸ்டா என்ற ராப் இசைக்குழு...
அரசியலும் கலையும் பிரிக்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்படும் நிலையில், அந்த கலையின் மூலம் இக்கால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் மெட்டுக்கட்டி பாடி வருகின்றனர் இந்த காம்ரேட் கேங்ஸ்டா
தினேஷ், ஆனந்த் காஸ்ட்ரோ, ஆர்.ஜே.பிரசாத் ஆகிய மூவரின் முயற்சியில், சமூக அவலங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் வகையில் ராப் பாடல்களை பாடி அரசியல் மேடைகளை அதகளப்படுத்தி வருகின்றனர்..
கலை அனைவருக்குமானது என்பதை உணர்த்தும் வகையில், இணையத்தை அலசி ஆராய்ந்து தங்களுக்கு தேவையான இசை நுணுக்கங்களை கற்று தேர்ந்து, அசத்தி வரும் இந்த குழு, இதுவரை சாதி, மத, பாலின பாகுபாடு உள்ளிட்டவற்றை களமாக தேர்வு செய்திருக்கிறது.
அரசியல் களத்தை மையமாகக் கொண்டு இவர்கள் பாடல்களை இயற்றி வரும் சூழலில், அரசியல் இல்லாமல் அணுவும் அசையாது என்பதை உணர்ந்ததால், ராப் பாடல்களை பாடி வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஆர்.ஜே. பிரசாத், காம்ரேட் கேங்ஸ்டா
தினேஷ், ராப் பாடகர்
அதனோடு அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் என அரசியல் தலைவர்கள் குறித்தும் பாடல்களை இயற்றுவதோடு அதனை மார்கழியில் மக்களிசை, தமிழ்நாடு அரசின் நெய்தல் கலைவிழா, அரசியல் மேடைகள், பொது இடங்கள் என தொடர்ந்து தங்களுக்கு கிடைக்கும் மேடைகளில் பாடவும் தயங்குவதில்லை..
சமூக வலைத்தளத்தில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களிடையே சமூக அக்கறையை அவர்கள் வழியிலேயே சென்று புகுத்தி அதே வேளையில் இசையையும் வளர்க்கும் காம்ரேட் கேங்ஸ்டா இசைக்குழுவுக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது..
தந்தி டிவி செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் மனோவா உடன் செய்தியாளர் சமயமணிவண்ணன்....