சினிமா

"நாட்டின் பல பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி மீ டூ" - கபிலன் வைரமுத்து

மீ டூ" பிரச்சினையை பிரம்மாண்டமான பொழுது போக்காக சித்தரித்து, நாட்டில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் திசை திருப்பும் முயற்சி என கபிலன் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி

* "மீ டூ" பிரச்சினையை பிரம்மாண்டமான பொழுது போக்காக சித்தரித்து, நாட்டில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் என்று பாடலாசிரியரும், கவிஞர் வைரமுத்துவின் மகனுமான கபிலன் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.

* இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் ஆண், பெண்ணின் மீதும் பெண் ஆணின் மீதும் பழி சொல்லும் போக்கு மிகவும் அபாயகரமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

* தனது தந்தையின் பெருமைகளை அழுக்குப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

* வைரமுத்து மீது சுமத்தப்படும் பழிகளுக்கு எத்தகைய காரணம் இருப்பினும், அவை சட்டரீதியாக பதிவாகட்டும், உண்மை வெல்லட்டும் என்று கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி