சினிமா

மெரினா போராட்டம் ஒரு தலைவரை அறிமுகம் செய்யாதது வருத்தம் - நடிகர் பொன்வண்ணன்

மெரினா புரட்சி, ஒரு தலைவரை அடையாளம் காட்டியிருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும் என நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மெரினா புரட்சி, ஒரு தலைவரை அடையாளம் காட்டியிருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும் என நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி 'மெரினா புரட்சி' என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் நடைபெற்ற படத்தின் அறிமுக விழாவில், பங்கேற்று பேசிய நடிகர் பொன்வண்ணன், மெரினா போராட்டத்தை போல், ஒரு போராட்டத்தை தாம் பார்த்தது இல்லை என்றும், இனிமேல், நாம் பார்க்க போவதும் இல்லை என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ஜாதி மத பேதமின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதாகவும், ஆனால் இந்தப் போராட்டம் முழுமையாக வெற்றி பெற்று விடக் கூடாது என்று போலீசார் தடியடி நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு