சினிமா

"மஞ்சள் வீரன்" - டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ்?

தந்தி டிவி

மஞ்சள் வீரன்" - டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ்?

தரையிலும், சிறையிலும் பார்த்த தன்னை, அடுத்து நீங்கள் பார்க்க இருப்பது திரையில் எனக்கூறி கெத்து காட்டியிருந்தார் டிடிஎஃப் வாசன்..

இயக்குநர் செந்தில் செல்அம் இயக்கத்தில் "மஞ்சள் வீரன்" என்னும் திரைப்படம் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார்...

தொடர்ந்து, இது தொடர்பான போஸ்டர்களும் வெளியாகி டிடிஎஃப் பேன்ஸ்களை உற்சாகத்தில் மூழ்கடித்திருந்தது..

இந்நிலையில்தான், அவர்களின் தலையில் பேரிடியாய் விழுந்தது இந்த செய்தி..

இணைந்து பயணிக்க இயலாத சூழலால் டிடிஎஃப் வாசன் நீக்கம் - செல்அம்

டிடிஎஃப் வாசனை தன் படத்தில் இருந்து நீக்குவதாக இயக்குநர் செல்அம் தெரிவித்தது டிடிஎஃப் ரசிகர்கள் பலரையும் அதிர வைத்தது..

டிடிஎஃப் வாசனுக்கு பிற வேலைகள் நிறைய இருப்பதாகவும், இதனால் படப்பிடிப்பிற்கு அவரால் சரிவர வர முடியாததால் டிடிஎஃப் வாசனை நீக்குவதாக தெரிவித்திருந்தார் செல்அம்..

இதனை டிடிஎஃப் வாசனிடம் கூட தெரிவிக்காமல், நேரடியாக ப்ரஸ் மீட் மூலம் அவருக்கு தெரியப்படுத்தியது இருவருக்குமிடையே ஏதோ மனக்கசப்பு இருப்பதையும் வெளிச்சமிட்டு காட்டியது...

இந்நிலையில், கொந்தளித்த டிடிஎஃப் வாசன், தனக்கு இயக்குநர் செல்அம் துரோகம் இழைத்து விட்டதாகவும், என் பெயரை பயன்படுத்தி மஞ்சள் வீரன் படத்திற்கு புரோமோஷன் செய்து தன்னை அவர் ஏமாற்றி விட்டதாகவும் மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார்..

பச்சத் துரோகம், தன்னை ஏமாற்றி விட்டார் இயக்குநர் - டிடிஎஃப்

இதனிடையே, படத்தில் டிடிஎஃப் வாசனின் பகுதியை தவிர, அனைவரின் பகுதியும் படமாக்கப் பட்டதாகவும், ஹீரோவுக்கான காட்சிகள் மட்டும் மீதம் இருப்பதாக கூறிய செல்அம், அக்டோபர் 15 ஆம் தேதி படத்திற்கான புதிய ஹீரோவை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்...

டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக நான் தான் ஹீரோ - கூல் சுரேஷ்

இந்நிலையில்தான், டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக மஞ்சள் வீரன் திரைப்படத்தில் தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார் நடிகர் கூல் சுரேஷ்..

ஒரு படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் தன் பாணியில் அலப்பறை கூட்டி வரும் கூல் சுரேஷ் மஞ்சள் வீரன் படத்தை என்னவாக்க போகிறார் ? என வழக்கம் போல இணையவாசிகள் கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்..

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி