இருபெரும் ஜாம்பவான்களுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக திரிஷா நெகிழ்ந்துள்ளார். நாயகன் படத்தை தொடர்ந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில், நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். மணிரத்னம், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களுடன் மீண்டும் இணைவது சிலிர்ப்பூட்டுவதாக குறிப்பிட்டுள்ள திரிஷா, அதிலும் கனவுகள் பலமுறை நனவாகும் போது, ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்வதாக நெகிழ்ந்துள்ளார்.