மலையாள திரையுலக மெகா ஸ்டார் மம்முட்டியின் 75-வது பிறந்தநாளையொட்டி அவரை சிறப்பிக்கும் விதமாக தனுஷின் 'ஓம்' படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடித்து வரும் 'ஓம்' திரைப்படத்தில் மும்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், மம்முட்டியின் பிறந்தநாளையொட்டி, "மம்முக்காவின் மேஜிக்" என்ற தலைப்போடு படக்குழு வெளியிட்டுள்ள பிரத்யேக வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
#Mammootty #birthday #Om #film #dhanush #thanthitv