சினிமா

Mammootty | தீயாய் பரவிய தகவல் - ஒரு ஆண்டுக்கு பின் முற்றுப்புள்ளி வைத்த மம்மூட்டி

தீயாய் பரவிய தகவல் - ஒரு ஆண்டுக்கு பின் முற்றுப்புள்ளி வைத்த மம்மூட்டி

thanthitv

தீயாய் பரவிய தகவல் - ஒரு ஆண்டுக்கு பின் முற்றுப்புள்ளி வைத்த மம்மூட்டி "வாசனை, சுவை அறிந்து கொள்ளும் உணர்வு இல்லாமல் போனது" - மம்மூட்டி தனக்கு சில காலமாக வாசனை மற்றும் சுவை அறிந்து கொள்ளும் உணர்வு இல்லாமல் போனதாக நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக நடிகர் மம்மூட்டி சென்னையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து மீண்டு விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் தனது உடல்நிலை குறித்து பேசிய அவர், தனக்கு சில காலமாக எந்த வாசனையாக இருந்தாலும் அதை உணர முடியவில்லை என்றும், சாப்பிட்டால் உணவின் சுவை தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பாக இருக்கலாம் என எண்ணியபோது, பரிசோதனைக்கு பிறகு வேறு உடல்நல பிரச்னை என்பது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நமக்கு பார்க்கும் திறன், கேட்கும் திறன் கடவுள் தந்த வரம் என்றும், அதேபோல்தான் சுவை திறனும் எனவும், தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாகவும் நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்