சினிமா

சூப்பர்ஸ்டார் ரஜினி, தளபதி விஜய்யை இணைத்த லெஜெண்ட் சரவணன் - வேற லெவல் அப்டேட்.. மிரண்டுபோன சினிமா..!

தந்தி டிவி

முதல் படத்தில் எழுந்த விமர்சனங்களை கண்டுக்கொள்ளாமல், transformation உடன் அடுத்த பட அப்டேட்டை கொடுத்துள்ள லெஜண்ட் சரவணன் குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

தனது கடை விளம்பரங்களுக்கு கிடைக்கும் மவுசை பார்த்து, தாமே விளம்பரங்களில் நடிக்க களமிறங்கியவர் லெஜண்ட் சரவணன்..

முன்னணி நடிகைகளுக்கு ஜோடியாக, சிக்னேச்சர் ஸ்டெப்புடன் விளம்பரங்களில் அவர் நடிக்க... பலருக்கு வயிற்றெரிச்சல் தொடங்கியது.

ஒரு சிலர் சரவணனை விமர்சித்தாலும், அதனை ஏற்போர் இந்த வயசுல நடிக்கிறாரே ! என வரவேற்றனர். இந்த வரவேற்பை வைத்தே திரைத்துறையிலும் கால் பதித்து விடலாம் என முடிவெடுத்தார் சரவணன்.

அப்படி உருவான லெஜண்ட் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வஷி ரவுடெல்லாவுடன் ஜோடி சேர்ந்த சரவணன், காதல், சண்டை, அழுகை என அனைத்து உணர்வுகளையும் காட்டினார்.

இருப்பினும்.. இறுதியில் மிஞ்சியது ட்ரோல்ஸ் மட்டுமே. எல்லா சீனுக்கும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன் என்ற விமர்சனம் பலரால் முன்வைக்கப்பட்டது. படம் ஹிட் அடிக்கவில்லை என்றாலும்.. லெஜண்ட் படத்தை குறித்து அறியோதோர் இல்லை என்ற நிலை இருந்தது.

ஆனாலும்.. இந்த வயதில் தன்னம்பிக்கையுடன் இந்த முயற்சியில் ஈடுபட்டது பாராட்ட வேண்டிய விஷயம் என சாஃப்ட் கார்னரும் அவர் மீது இருந்தது. இதன் பின் திரைத்துறையில் ஒதுங்கி விடுவார் என எண்ணிய போது, தோற்றத்தில் அதிரடி மாற்றத்தை காண்பித்து, இரண்டாவது படத்திலும் தைரியமாக கமிட் ஆகியுள்ளார் சரவணன்...

விஜய் போல்... சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசு கொடுத்து.... அவர்களுடன் ரஜினிகாந்த் பாடலுக்கு நடனமாடி.. கதை தயார்... விரைவில் படப்பிடிப்பு என புதுப்பட அப்டேட்டை வெளியிட்டுள்ளார் லெஜண்ட் சரவணன்...

கேலி, கிண்டலுக்கு மத்தியில் துணிச்சலுன் அப்டேட்டுகளை பறக்க விடும் லெஜண்ட், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து காணலாம்...

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்