சினிமா

பிரபல நடிகரை பிடிக்க சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு.. உடனே வந்த மெயில்... இன்று போலீஸ் கண் அசைவில்..

தந்தி டிவி

பாலியல் புகார் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மலையாள நடிகர் சித்திக் நேரில் ஆஜரானார்.

கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின், இது பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது. புகார்களின் அடிப்படையில் பல்வேறு நடிகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பலரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமீன்

மனுவை கேரளா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கைது

நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக தலைமறைவான சித்திக்கை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்த நிலையில், உச்சநீதிமன்றம் சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவர், பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளதாக மின்னஞ்சல் மூலம் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் சித்திக் திருவனந்தபுரம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்