நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரகு தாத்தா திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பிரபல எழுத்தாளர் சுமான் குமார் இயக்கத்தில், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தின் டிரைலரிலேயே கீர்த்தி சுரேஷின் வசனங்கள் அதிரடி காட்டியிருந்த நிலையில், சுதந்திர தினத்தின் போது திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.