சினிமா

சம்பரில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணமா? பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு விரைவில் திருமணம்?

தந்தி டிவி

தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமான அவர், ரஜினிமுருகன், பைரவா, சர்கார், ரெமோ, தானா சேர்ந்த கூட்டம், சாமி இரண்டாம் பாகம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக அறியப்பட்டதோடு, நடிகையர் திலகம், ரகு தாத்தா போன்ற கதாநாயகியை மையமாக உள்ள படங்களிலும் நடித்து தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார்...

இப்படி திரையுலகை கலக்கிய கீர்த்தி சுரேஷ் குறித்து விமர்சனங்கள் எழத் தவறியதில்லை...

பைரவா பட பூஜையில் நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு அருகில் மாலையுடன் நின்ற புகைப்படங்கள் வைரலாகி, இருவருக்கும் திருமணமானதாக வதந்திகள் பரவின...

அந்த வதந்தியில் இருந்து மீண்டு வந்த கீர்த்தி சுரேஷ், ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது..

இருப்பினும் அனைத்து விமர்சனங்களுக்கும் மௌனம் காத்து வந்தார் கீர்த்தி...

அண்மையில், இசையமைப்பாளர் அனிருத்தும் கீர்த்தி சுரேஷும் காதலிப்பதாக பரபரப்புடன் பேசப்பட விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது..

ஆனால் அனிருத் தனக்கு நல்ல நண்பர் மட்டும் தான் என விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கீர்த்தி...

இந்நிலையில் தான் வரும் டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

கீர்த்தி சுரேஷின் பெற்றோர்களால் மாப்பிள்ளை தேர்வு செய்யப்பட்டு, அவர் ஒப்புதல் தெரிவித்ததால், விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கோவாவில் திருமண கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது...

கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரையே அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக மலையாளத் திரையுலகில் பேசப்படும் நிலையில், இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் பதிலளிக்கப்படவில்லை...

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்