சினிமா

கமலின் விக்ரம் படத்தை இணையத்தில் வெளியிட தடை | Vikram

கமலின் விக்ரம் படத்தை இணையத்தில் வெளியிட தடை | Vikram

தந்தி டிவி

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை சட்ட விரோதமாக இணைய தளத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படம், ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனிடையே, சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடைகோரி, தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணையில், பெரிய பொருள்செலவில் தயாரித்துள்ளதால், இணையத்தில் வெளியானால் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறினார். இதனால், சட்டவிரோத வெளியீட்டுக்கு தடை வேண்டும் என்றும் கோரினர். இதையேற்ற நீதிபதி சி.சரவணன், படத்தை இணையத்தில் வெளியிட தடை விதித்தனர். மனுவுக்கு, பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஜியோ உள்ளிட்டோர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டார். விசாரணை ஜூலை ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''