கல்கி திரைப்படத்தில், நடிகர் அமிதாப் பச்சனின் புதிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
நடிகர் அமிதாப் பச்சனின் 81 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி, கல்கி திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது. மேலும், தங்களது திரைப்பயணத்தில் நாங்களும் ஒரு பகுதியாக இருப்பதும், உங்களின் மகத்துவத்தை அருகில் இருந்து பார்ப்பதும் எங்களுக்கு பெருமை அளிக்கிறது என்றும் படக்குழுவான வைஜயந்தி மூவீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.