சினிமா

ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர் நடிக்கும் 'தேவரா'

தந்தி டிவி

ஜுனியர் என்.டி.ஆர்., நடிப்பில் கொரடாலா சிவா இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது தேவரா படத்தின் முதல் பாகம்...

படத்தில் நாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது...

படத்தில் சைஃப் அலிகான், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், கலையரசன், முரளி ஷர்மா, நரேன் என பலரும் நடித்துள்ள சூழலில், டபுள் ஆக்‌ஷனில் கலக்கியுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உள்ள சூழலில், செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வருகிறது தேவரா திரைப்படம்...

இந்நிலையில் படத்திற்கு செப்டம்பர் 27ம் தேதி நள்ளிரவு முதல் 6 காட்சிகளுக்கு அனுமதியளித்துள்ளது ஆந்திர அரசு.

இப்படியாக படத்திற்கு வரவேற்பு அதிகம் இருக்கும் சூழலில், ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடந்தது களேபரம்...

ஹைதராபாத்தில் ஒரு அரங்கில் தேவரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்..

நிகழ்ச்சிக்கு வருகை தரும் நட்சத்திரங்களை காண திரண்ட அதீத கூட்டத்தால், ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட, அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது..

ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசலால் பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சிலர், அரங்கில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டதால், பதற்றம் அதிகரித்தது..

உடனடியாக அங்கு திரண்ட போலீசார், ரசிகர்களை விரட்டி அனுப்பினர்... இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்...

அதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிவித்த அவர், நடந்த சம்பவத்தால் மன வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்..

இன்னும் ஓரு சில தினங்கள் படம் வெளியாகவுள்ள சூழலில், இந்நிகழ்வு துரதிஷ்டவசமானது என வேதனை தெரிவிக்கிறது தெலுங்கு திரைத்துறை வட்டாரம்..

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?