சினிமா

ஜானி மாஸ்டரின் செய்யக்கூடாத செயல்.. தேசிய விருது ரத்து

தந்தி டிவி

போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடன இயக்குனரான ஜானி மாஸ்டருக்கு, திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனிடையே ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகாரளித்த 21 வயது இளம்பெண், 16 வயது முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய விருது விழாவில் பங்கேற்க, ஜானி மாஸ்டருக்கு வரும் 10-ஆம் தேதி வரை, நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேசிய திரைப்பட விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய திரைப்பட விழா அழைப்பிதழும், திரும்பப் பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்