சினிமா

பிரபல நடிகர் மீது பாய்ந்த பாலியல் புகார்..நடிகைக்கு வரும் மிரட்டல்கள் - பேரதிர்ச்சியில் மாலிவுட்

தந்தி டிவி

நடிகர் ஜெயசூர்யா தரப்பில் இருந்து தனது புகாரை வாபஸ் பெற அழுத்தங்கள் தரப்படுவதாக, நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.கேரளாவைச் சேர்ந்த நடிகர் ஜெயசூர்யா தனக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்ததாக நடிகை ஒருவர் குற்றம்சாட்டியிருந்தார்.அதன் பேரில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தொடுபுழா போலீசார், அந்த நடிகையிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.அதோடு சம்பவ இடத்தையும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் ஜெயசூர்யா மீதான புகாரை திரும்பப் பெறுமாறு மறைமுக மிரட்டல் விடுக்கப்படுவதாக நடிகை புகார் தெரிவித்துள்ளார். நேரடியாக மிரட்டவில்லை என்றாலும் அன்பாக பேசுவது போல் மறைமுகமாக மிரட்டப்படுவதாகவும்,ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது எனவும் பணம் தேவைப்படுகிறதா எனக் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.ஜெய சூர்யாவின் திரைப்படம் விரைவில் வெளியாகும் நிலையில் இந்த வழக்கு அந்த திரைப்படத்தை பாதிக்கும் அல்லவா என ஒருவர் கேட்டதாகவும் கூறினார்.திரைத்துறையில் உள்ள பல கெட்ட அனுபவங்களை, காலப்போக்கில் வெளிப்படுத்துவேன் எனவும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்