சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகர் சீன் கானரி 90 வது பிறந்த நாள் இன்று- பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் வாழ்த்து

ஹாலிவுட் திரையுலகின், கனவு நாயகனான ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமான சீன கானரி இன்று தமது 90 வயதை எட்டுகிறார்.

தந்தி டிவி

ஹாலிவுட் திரையுலகின், கனவு நாயகனான ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமான சீன கானரி இன்று தமது 90 வயதை எட்டுகிறார். அவரது பிறந்த நாளை ஒட்டி ஹாலிவுட் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலக ரசிகர்கள் என அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஹாலிவுட்டின் சஸ்பென்ஸ் திரைப்படங்களில் துப்பறியும் ஏஜெண்டாக வந்த பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட சீன் கேனரி கடந்த 1989 ஆம் ஆண்டு உலகின் கவர்ச்சியான மனிதர் என பிரபல பீப்பிள் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2000 -மாவது ஆண்டு பிரிட்டன் ராணி எலிசபெத்தை காக்கும் போர் வீரராக, சீன் கானரி கவுரவப்படுத்தப்பட்டார். இவரது நடிப்பில் டாக்டர் நோ, ""From Russia With Love," "Goldfinger", "Thunderball" "You Only Live Twice" உள்ளிட்ட படங்கள் சக்கை போடு போட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி