#TamilPadam3 #MirchiShiva #TamilMovie #CinemaNews #ThanthiTV
Tamil Padam 3 | Mirchi Shiva | `செம Fun இருக்கு’ - 3ம் பாகத்தோடு முரட்டு என்ட்ரி கொடுக்கும் சிவா.. மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான ‘தமிழ்ப்படம்' திரைப்படத்தின் மூன்றாம் பாகம் தற்போது தயாராக உள்ளதாக போஸ்டர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியது. முதல் இரண்டு பாகங்களைப் போலவே, சமீபத்திய தமிழ் திரைப்படங்களின் மாஸ் காட்சிகளையும் நகைச்சுவையாகக் கலாய்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான திரைப்படம் தமிழ்ப்படம் . தயாநிதி அழகிரி தயாரித்த இந்தப் படத்தில் திஷா பாண்டே, எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கண்ணன் இசையமைத்திருந்தார். தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் அறிமுகமாகும் காட்சிகள், பஞ்ச் வசனங்கள், காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வழக்கமான சினிமா அம்சங்களை நகைச்சுவையாகக் கலாய்த்திருந்தார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இடம்பெற்ற பிரபலமான காட்சிகளை நினைவூட்டும் வகையில் அமைந்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. வித்தியாசமான முயற்சியாக வெளியான தமிழ்ப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு தமிழ்ப்படம் 2 வெளியானது. இந்தப் படத்தையும் சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். மிர்ச்சி சிவாவுடன் ஐஸ்வர்யா மேனன், சதீஷ், திஷா பாண்டே உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் தமிழ் சினிமாவின் பிரபலமான காட்சிகள், ஹீரோக்களின் மாஸ் வசனங்கள், அரசியல் சம்பவங்கள் எனப் பல விஷயங்களை நகைச்சுவையாகக் கலாய்த்திருந்தனர். குறிப்பாக பாகுபலி , விவேகம் , மெர்சல் உள்ளிட்ட படங்களையும், ஓபிஎஸ் செய்த தர்மயுத்தத்தை நினைவூட்டும் வகையிலான காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. சதீஷின் வில்லன் கதாபாத்திரமும் படத்தின் நகைச்சுவைக்கு வலுசேர்த்தது. இந்தப் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழ்ப்படம் 3 உருவாகிறது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஏராளமான பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக விக்ரம் , ஜெயிலர் , லியோ , கூலி , ‘குட் பேட் அக்லி போன்ற படங்களில் இடம்பெற்ற மாஸ் காட்சிகளை இந்த முறை கலாய்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.