சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீசாகிறதா"இந்தியன் 3" ?

தந்தி டிவி

நேரடியாக ஓடிடியில் ரிலீசாகிறதா"இந்தியன் 3" ?

இந்தியன் 2 மூலம் திரையரங்கில் ரசிகர்களை கதற விட்ட இந்தியன் தாத்தா, இந்தியன் 3 ஐ ஓடிடியில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது..

(தாத்தா வர்றாரே கதற விட போறாரு சாங்)

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்தியன் திரைப்படம், கடந்த ஜூலை 12இல் இரண்டாம் பாகமாக வெளியாகி பெரும் அடி வாங்கியது....

இந்தியன் ஒன்றில் மெய் சிலிர்க்க வைத்த இந்தியன் தாத்தாவும், அவரின் வர்மக் கலையும், இந்தியன் 2 ல் ட்ரோல் மெட்டீரியலானது..

இப்படி இருக்க, இந்தியன் 2 படத்தின் இறுதியில், இந்தியன் 3க்கான ட்ரெய்லரை வைத்து படத்தை முடித்திருந்தார் இயக்குநர் ஷங்கர்..

இணையவாசிகளின் விமர்சனங்களால் திணறிய இந்தியன் 2

முழுக்க முழுக்க போர் களத்தில் கதை உருவாகியிருப்பதாக கூறப்படும் இந்தியன் 3ஆம் பாகம், நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது...

மேலும், இந்தியன் 2 ப்ரோமோஷனின் போது, இந்தியன் 2ஐ விட இந்தியன் 3 நன்றாக இருக்கும் என கமல்ஹாசன் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில்தான், படக்குழுவும், தயாரிப்பு நிர்வாகவும் இந்தியன் 3ஐ ஓடிடியில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது...

இதற்கு முன், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் தற்போது கமல்ஹாசன் நடித்திருக்கும் "தக் லைஃப்" படத்திற்கு பிறகு இந்தியன் 3 வெளியாகும் எனக்கூறப்பட்டு வந்த நிலையில், இந்த தகவல் வெளியாகி இருக்கிறது...

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?