சினிமா

Chennai Actress Arrest | போதைப்பொருள் வழக்கில் நடிகை உட்பட 9 பேர் அதிரடி கைது.. சென்னையில் அதிர்ச்சி

thanthitv

#Chennai | #Drug | #Actress | #Arrest | #TNPolice | #ThanthiTV Chennai Actress Arrest | போதைப்பொருள் வழக்கில் நடிகை உட்பட 9 பேர் அதிரடி கைது.. சென்னையில் அதிர்ச்சி சென்னையில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்படி விக்னேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கைப்பற்றினர். மேலும், போதைப்பொருளை வெங்கடேஷ்குமார் என்பவர் கொடுத்ததாக அவர் கூறியதன் பேரில் வெங்கடேஷ்குமாரையும் கைது செய்து விசாரித்தனர். இதன்பேரில், நடிகை அஞ்சு கிருஷ்ணா, துணை நடிகை வின்சி என்கிற நிவேதா, கார்த்திக் ராஜா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அஞ்சு கிருஷ்ணா, ஓம் வெள்ளிமலை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு