சினிமா

"ராயல்டி எதை வைத்து முடிவு செய்கிறார்கள்?" - தயாரிப்பாளர் கே. ராஜன், இளையராஜாவுக்கு கேள்வி

ஒரு படத்தின் இசை உரிமை யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட பாதுகாப்புக்குழு தலைவருமான கே.ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி
ஒரு படத்தின் இசை உரிமை யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட பாதுகாப்புக்குழு தலைவருமான கே.ராஜன், கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா-விற்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், உங்களின் தனிப்பட்ட ஆல்பங்கள், பக்திப் பாடல்களுக்கு நாங்கள் ராயல்டி கேட்கவில்லை என்றும், எங்கள் தயாரிப்பில் உருவான படத்தில் உள்ள பாடல்களுக்கு ராயல்டி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேட்டுள்ளார். எப்படி இந்த ராயல்டி முறை வகுக்கப்பட்டுள்ளது?, ஏன் இது தயாரிப்பாளர்களுக்கு வருவதில்லை? என்றும் அந்த கடிதத்தில் ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி