இசைஞானி இளையராஜா மற்றும் கர்நாடக சங்கீத இசைப் பாடகரான சஞ்சய் சுப்ரமணியன் ஆகிய இருவரும் முதன்முறையாக கைகோர்த்துள்ளனர்.
மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் 20 பாடல்கள், திருப்பள்ளியெழுச்சியின் 10 பாடல்கள் என மொத்தம் 30 பாடல்களுக்கு இளையராஜா வரிகள் எழுதியுள்ளார்.
இந்தப் பாடல்களுக்குச் சஞ்சய் சுப்ரமணியன் இசையமைத்து, தனது குரலால் உயிர் கொடுத்துள்ளார்.
பழங்கால மெட்டுகளில் பாடப்படும் இந்தப் பாடல்கள், தற்போது இளையராஜா - சஞ்சய் சுப்ரமணியன் கூட்டணியில் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளன.
இந்தப் பாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுத் தயாராக உள்ள நிலையில், மிக விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.