போட்டியாளர்களிடம் ஒருமையில் பேசியதற்கு ராஜு பகிரங்க மன்னிப்பு பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்ற ராஜு ஜெயமோகன், போட்டியாளர்களிடம் ஒருமையில் பேசியதாகவும் திமிராக நடந்துகொண்டதாகவும் எழுந்த சமூக வலைதள விமர்சனங்களுக்குப் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். போட்டியாளர்களுடன் தனக்கு இருந்த நெருக்கம் மற்றும் உரிமையின் காரணமாகவே அப்படிப் பேசியதாகவும், ஆனால் அது போட்டியாளர்களைக் காயப்படுத்தியதை உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இனி தன்னை மேலும் திருத்திக் கொண்டு சிறப்பாகச் செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.