ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் ஒருவரை நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த சம்பவம் திரைப்படமாகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா, திஷா என்ற பெயரில் இதை திரைப்படமாக எடுக்க இருப்பதாக தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திஷா திரைப்படம் நிர்பயா கொலை போன்ற பாலியல் பலாத்கார கொலைகளுக்குப் பின் இருக்கும் உண்மையை பேசும் என்று கூறியுள்ளார்.