சினிமா

ஒப்பந்தத்தை மீறிய விஷால்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Vishal

தந்தி டிவி

நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூபாய் 21 கோடி கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

அந்த தொகை முழுவதையும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி, 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தை வெளியிடுவதாக விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான நடிகர் விஷாலிடம், வங்கி கணக்கு மற்றும் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், விஷாலின் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, செப்டம்பர் 22ம் தேதி நேரில் ஆஜராகும்படி நடிகர் விஷாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்