சினிமா

ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா

'வணிகன்' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி

'வணிகன்' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். நேரம், பிரேமம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆனந்த் நாக் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொகுப்பாளினியான நக்சத்திரா நாகேஷ் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள "வாடி முட்டக் கண்ணி " என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். மேலும் வணிகன் படத்தின் ஆடியோ உரிமையையும் யுவன் சங்கர் ராஜா வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்