யோகி பாபு தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள கூர்கா படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதில் நடிகர் விஜய் போல வேட்டி கட்டுவது, அஜித் போல வசனம் பேசுவது போன்ற காட்சிகள் உள்ளன. மேலும் அரசியல் வசனங்களும் உள்ளன.இதற்கு முன்பு யோகி பாபுவின் 'தர்மபிரபு' பட டீசரிலும் அரசியல் நெடி இருந்தது. எனவே, படத்திற்கு விளம்பரமாக இருக்க வேண்டும் என இதுபோல் நடிக்கிறாரா யோகி பாபு என்ற பேச்சு எழுந்துள்ளது.