கோபி, சுதாகர் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
யூடியூபர்ஸ் கோபி, சுதாகர் இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. பரிதாபங்கள் எனும் யூடியூப் சேனலின் மூலம் மக்களிடையே பிரபலமான கோபி மற்றும் சுதாகர் அறிமுக இயக்குனரான விஷ்ணு விஜயன்
இயக்கத்தில் ஓ காட் பியூட்டிபுல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சார்லி சாப்ளின் போல் உடை அணிந்து கோபி, கையில் "பொய் சொல்வது எப்படி" என்ற வாசகம் அடங்கிய புத்தகத்தை வைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் விடிவி கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, கோதண்டன், சுபத்ரா ராபர்ட் உட்பட பலர் நடித்துள்ளனர்.