சினிமா

ரிலீசுக்கு முன் வசூல் வேட்டையில் F9 - வெளிநாட்டில் மட்டும் ரூ.2,230 கோடி வசூல்

ஹாலிவுட்டில் ரிலீசுக்கு முன்னரே F9 என்ற (F NINE) திரைப்படம் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இதுபற்றி விரிவாக பார்க்கலாம்..

தந்தி டிவி

ஹாலிவுட்டில் ரிலீசுக்கு முன்னரே F9 என்ற (F NINE) திரைப்படம் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இதுபற்றி விரிவாக பார்க்கலாம்..

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை ஒட்டுமொத்த திரைத்துறையையும் முடக்கி வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று..

இதற்கு ஹாலிவுட் ஒன்றும் விதிவிலக்கு அல்ல.. 2021ஆம் ஆண்டு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடையும் சூழலில், இதுவரை எந்த பெரிய பட்ஜெட் படமும் வெளியிட முடியாமல் தவித்து வருகிறது ஹாலிவுட் திரையுலகம்...

ஊரடங்கு பாதிப்பில் இருந்து தமிழ் சினிமா கொஞ்சம் மீள்வதற்கு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் எப்படி உதவியதோ, அதைவிட மேலாக ஹாலிவுட்டிற்கு வெளிச்சம் காட்ட வந்துவிட்டது FAST AND FURIOUS திரைப்பட வரிசையில் வெளியாக உள்ள F NINE திரைப்படம்...

ஜூன் 25ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் வெளியாவதற்கு முன்னரே வெளிநாடுகளில் மட்டும் முன்பதிவு மூலம் சுமார் 2,230 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது... குறிப்பாக முதன்முறையாக பல்வேறு நாடுகளில் FAST AND FURIOUS திரைப்படம் வெளியாக உள்ளது

இருப்பினும் அமெரிக்கா, கனடாவில் வழக்கமான வசூல் இல்லை எனவும், கொரோனா பெருந்தொற்றால் ஏராளமான தியேட்டர்கள் திறக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் கிட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

எதுஎப்படி இருந்தாலும், F9 திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில், அடுத்தடுத்து "Black Widow", "Space Jam" போன்ற பெரிய பட்ஜெட் படங்கும் ரீலீசுக்கு தயாராகிவிட்டன. இதனால் ஹாலிவுட் திரையுலகம் மெல்ல மெல்ல மீண்டு வர தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர் அங்குள்ள சினிமா விமர்சகர்கள்..

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை