சினிமா

விவாகரத்து வதந்தி- அபிஷேக் பச்சன் விளக்கம்

தந்தி டிவி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சன், தன்னை விட வயதில் மூத்தவரான நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளனர். சமீப காலமாக, தஸ்வி என்ற படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நிம்ரத் கவுர் என்ற நடிகையுடன் அபிஷேக் பச்சன் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாகவும், இதனால், அவருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால், ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வருவதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் வதந்திகள் பரவி வந்தன. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அபிஷேக் பச்சன், தான் மிகவும் நேர்மையானவன் என்றும், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு செவிசாய்க்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

எந்த இக்கட்டான சூழலிலும், தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அபிஷேக் பச்சன் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், இவற்றை ஏற்க மறுக்கும் இணையவாசிகள், மகள் ஆராத்யாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்