எம்.ஜி.ஆரின் இடத்தை எவராலும் பிடிக்க முடியாது என திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கூறியுள்ளார். மணப்பாறையை அடுத்த சீத்தப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், எம்.ஜி.ஆருக்கான கதாபாத்திரம், எழுத்து உள்ளிட்ட எதுவானாலும் அது மக்களை பற்றியே இருக்கும் என புகழாரம் சூட்டினார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மருத்துவம் பற்றி எம்.ஜி.ஆர். தெளிவாக கூறி இருப்பதாக சுட்டிக்காட்டிய ஆர்.வி. உதயகுமார், மருத்துவத்தை சேவையாக பார்க்க வேண்டும் என்றார்.