சினிமா

`துருவ நட்சத்திரம்' ரிலீஸ் மீண்டும் சிக்கல்... கோர்ட் போட்ட கண்டிஷன்.. கௌதம் வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

 நடிகர் விக்ரம் - கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், ஆல் இன் பிக்சர்ஸிடம் வாங்கிய 2 கோடியே 40 லட்ச ரூபாயை கெளதம் மேனன் திருப்பி அளிக்காமல், படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், காலை 10.30 மணிக்குள் பணத்தை திருப்பி அளிக்கவில்லை என்றால், படத்தை வெளியிட தடை விதித்தது. இந்தநிலையில் கௌதம் மேனன், தங்களால் முடிந்தவரை முயன்றும், துருவ நட்சத்திரத்தை இன்று திரைக்கு கொண்டு வர முடியவில்லை என தெரிவித்துள்ளார். படத்தை திரைக்கு கொண்டுவர இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இன்னும் சில நாட்களில் படம் வெளியாகும் என உறுதி தெரிவித்துள்ளார். படம் இன்று வெளியாகாததற்கு ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்