சினிமா

விரைவில் தீனா ரீ-ரிலீஸ்! - அடுத்தடுத்து திரையில் என்ட்ரி கொடுக்கப்போகும் படங்கள்

தந்தி டிவி

சமீபத்தில் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அஜித்குமார் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற தீனா திரைப்படம் மறுவெளியீடு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

தமிழ் திரையுலகில் தற்போது ரீ-ரிலீஸ் கலாசாரம் நிலவி வருகிறது. அதன்படி, வேட்டையாடு விளையாடு, பாபா, ஆளவந்தான், விண்ணை தாண்டி வருவாயா, மயக்கம் என்ன, 3 உள்ளிட்ட படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த வாரம் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், அஜித் நடிப்பில் முன்னதாக வெளியாகி வெற்றியடைந்த மங்காத்தா திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய வேண்டுமென ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், மங்காத்தா திரைப்படத்தை வெளிநாடுகளில் வெளியிட கையொப்பமிட்டதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் இன்னும் அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மட்டுமின்றி ரத்தினம், ஒரு நொடி உள்ளிட்ட புதிய படங்களும் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளதால் சினிமா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்